சந்தோசதில்தான் வாழ்க்கை அடங்கயுள்ளது . சில நேரங்களில் நாம் அடையும் வெற்றியும் மகிழ்ச்சியின் மூலமாகவே கிடைக்கிறது . வாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் மகிழ்ச்சி உள்ளது .
வாழ்க்கை என்பது ஒரு பூச்செடி போன்றது . அதில் எத்தனை பூக்கள் உதிர்கின்றன என்பதைவிட , எத்தனை பூக்கள் மலர்கின்றன என்பதை நினைத்து மகிழ்ச்சிகொள்
நாம் நம் மனதை மகிழ்ச்சியுடனும் , தெளிவுடனும் வைத்திருந்தால் எந்த தடைகளும் , பிரச்சனைகளிலும் நம்மை நெருங்காது .
உனக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கின்றதோ அதை நோக்கி நீ பயணம் செய். எந்த கவலைகள் வந்தாலும் முகமகில்சியை மட்டும் விட்டுவிடாதே .
நீ மகிழ்ச்சியை தூர எறிந்தால் உன் வாழ்கையும் தூரமாகும் உனக்கே !
இன்னும் நிறய வச்சிருக்கேன் இது மாதிரி , அப்பப்ப பதிவிட்டு பயமுறுத்துறேன் ., சரியா?
Monday, 6 June 2011
Friday, 3 June 2011
குப்பு குப்புன்னு ஊதுற சமூக எதிரி...
என் இனிய எதிரிகளே, என்னடா எதிரின்னு சொல்லறேன்னு பார்க்காதீங்க, எனக்கு பிடிக்காத ஒன்னை ஒருத்தர் செய்யும் பொது எனக்கு வரும் பாருங்க கோவம், அத அடக்கவே முடியாது., இப்ப கூட அந்த மாதிரி ஒரு கோவத்தை அங்கே காட்ட முடியாம இப்ப உங்க கிட்ட சொல்லபோறேங்க., அதுக்கு முன்னாடி நம்ம தமிழ் கலாசார வணக்கமுங்க!
தன்னோட குடும்பம், உறவினர், நண்பர் என்று யார் மேலயும் அக்கறை இல்லாத இவங்கள பத்திதாங்க சொல்ல போறேன், இல்லே இல்லே திட்ட போறேன் .
வேற யாரு நம்ம சிகரட் குடிக்கிரவங்கதாங்க அவங்க.,!
எங்கே உங்களுகேலாம் மூளைன்னு ஒன்னு இருக்கா? இல்லையா? சிகரெட்ட குடிக்கிறதுதான் குடிக்கிறீங்க அந்த கருமத்த கொஞ்சம் வெளியே பொய் குடிச்சு தொலயலாமேதானே ..? குடிச்சே தொலயாதீங்கன்ன கேட்கவா போறீங்க., அப்படி கேட்க நான் யாருங்க ., உங்க சகோதரியா? இல்லே தோழியா? சரி விடுங்க,
அன்னைக்கு கடைக்கு போயிருந்தேங்க, அங்கே ஒரு சமூகத்த பத்தி கவலையில்லாத ஒரு ஆளு அவ்வளவு பேர் நிக்கிரமேன்னு கவலை இல்லாம குப்பு குப்புன்னு புகையை ஊதுராறு., இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அடுத்தவங்கள பத்தி அக்கரேயே இல்லைங்க., ச்சே இந்த மாதிரி ஆளுங்க வீட்டுக்கு நான் ஒரு ஆளை கூபிட்டு வந்து அந்த ஆளு வீட்டுல எல்லோருக்கும் முன்னாடி குப்பு குப்புன்னு ஊத சொன்னா , இவர் எங்கே போயி முட்டுவாறு, இவங்கதாங்க சமூக எதிரி., இதுக்கு நியாயம் கேட்க உங்ககிட்ட வந்த நீங்களும் பம்முவீங்க, ஏன்னா உங்களில் பலபேர் சிகரட் ஆசாமியாதான் இருப்பீங்க., அதனால இங்கே கொட்டி தீத்துக்கிறேன் .
ஏன் நீங்களே அந்த ஆளுகிட்ட திருந்த சொல்லவேண்டியதுதானே அப்படின்னு கேட்பீங்க, அதுனால அந்த சண்முக எதிரி.... ச்சே ச்சே சமூக எதிரி கிட்டே என்னோட ஐடியை குடுத்து நாளைக்கு என்னோட ப்ளாக்க பாருன்னு சொல்லிட்டேன்., அவனுக்கு அதுவே பெரிய அடிதானே.,??
சரி இதெல்லாம் படிச்சிட்டு கமெண்டுல உங்க வீட்டுகாரர் குடிக்காமாட்டாராக்கும்., என்று கேட்குறது., என்னை திட்டுறது., கமெண்டே போடகூடதுன்னு நினைக்கிறது .,இப்படி எத நினச்சாலும் எனக்கு கவலையில்லை., இத படிச்சு உங்கள்ள யாராவது ஒருத்தர் திருந்தினாலும் சந்தோசமுங்க!

Thursday, 2 June 2011
நானும் எனது மொக்கை கவிதையும்
கவிதைகள் என்ற பெயரில் கிருக்குவேனுங்க ., அதில் சில நல்லாருக்குன்னு எனக்கு தெரிஞ்சவங்க சொன்னதுனால அதில் ஒன்னு ரண்ட அப்பப்ப போஸ்ட் பன்னுறேனுங்க., தப்பு இருந்தா திட்டாதீங்க, சொல்லுங்க திருத்திக்கிறேன் . ஹி ஹி
( யாரிடம் இதெல்லாம் கேட்டேன் என்று குறிப்பிட்டால் நீங்கள் நான் இந்த மதம் என்று யோசிப்பீங்கள்ளே.......)
யாராக இருக்க ஆசை!
தன் குஞ்சுக்காக
வேகுற வெயிலில்
ஒத்த காலில் நின்று
இறை தேடுமே கொக்கு
அது போல குணம் கொடு !
பசி என்று வந்த வண்டுக்கு
தேன் கொடுத்து உதவுமே பூ
அது போல மணம் கொடு !
தன் பசியை போக்க
காட்டில் மானை கொன்று
தின்னுமே புலி
அது போல ஊனம் இல்லாது
என்னைக் காத்துக்கொள்ளும்
திறன் கொடு !
தன்னை நம்பி வாழ்கின்ற
மீன்களை என்றுமே வற்றாது
காத்து கொள்ளுமே கடல்
அதுபோல தினம் எங்களை
காத்துக்கொள்!
உன்னையே நம்புகிறவர்களுக்கு
நீ எப்படியே
அப்படியே - என் மீது
மற்றவர்கள் கொண்ட நம்பிக்கையை
காப்பாற்றும் சக்தி கொடு!

Subscribe to:
Posts (Atom)