Thursday, 2 June 2011

நானும் எனது மொக்கை கவிதையும்

கவிதைகள் என்ற பெயரில் கிருக்குவேனுங்க ., அதில் சில நல்லாருக்குன்னு எனக்கு தெரிஞ்சவங்க சொன்னதுனால அதில் ஒன்னு ரண்ட அப்பப்ப போஸ்ட் பன்னுறேனுங்க., தப்பு இருந்தா திட்டாதீங்க, சொல்லுங்க திருத்திக்கிறேன் . ஹி ஹி

யாராக இருக்க ஆசை!

தன் குஞ்சுக்காக
வேகுற வெயிலில்
ஒத்த காலில் நின்று
இறை தேடுமே கொக்கு
அது போல குணம் கொடு !

பசி என்று வந்த வண்டுக்கு
தேன் கொடுத்து உதவுமே பூ
அது போல மணம் கொடு !

தன் பசியை போக்க
காட்டில் மானை கொன்று
தின்னுமே புலி
அது போல ஊனம் இல்லாது
என்னைக் காத்துக்கொள்ளும்
திறன் கொடு !

தன்னை நம்பி வாழ்கின்ற
மீன்களை என்றுமே வற்றாது
காத்து கொள்ளுமே கடல்
அதுபோல தினம் எங்களை
காத்துக்கொள்!

உன்னையே நம்புகிறவர்களுக்கு
நீ எப்படியே
அப்படியே - என் மீது
மற்றவர்கள் கொண்ட நம்பிக்கையை
காப்பாற்றும் சக்தி கொடு!

( யாரிடம் இதெல்லாம் கேட்டேன் என்று குறிப்பிட்டால் நீங்கள் நான் இந்த மதம் என்று யோசிப்பீங்கள்ளே.......)

9 comments:

sathishsangkavi.blogspot.com said...

//உன்னையே நம்புகிறவர்களுக்கு
நீ எப்படியே
அப்படியே - என் மீது
மற்றவர்கள் கொண்ட நம்பிக்கையை
காப்பாற்றும் சக்தி கொடு!//

அருமையான வரிகள்...

நல்ல கவிதை நடை...

ஏங்க இது மொக்கை கவிதை அல்ல..

அழகான கவிதைதான்... இன்னும் நிறைய எழுதுங்க...

ஷர்மிளா said...

வந்தவங்க நாலு வார்த்தை அது திருத்தமாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க, திருதிக்கிறேனுங்க

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முயற்சி அருமைதான் கவிதை வரிகளில் கருத்துக்கான தாக்கம் இருக்கிறது...

இன்னும் ஆழமாக வடிவத்தில் கொண்டுவாருங்கள்...

கவிதையில் சிறக்க வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை மொக்கை கவிதை என தரம் பிரிக்காதீர்கள்..

அதைபடிப்பவர்கள் பார்த்து கொள்வார்கள்..

இந்த கவிதை அந்தபட்டியலில் வராது..
கவிதைக்கு வித்தியாசமான முறையில் தலைப்பிடுங்கள்..

பிரபலமாக என் வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கு கவிதையை விட காமெடி ரைட்டிங்க் எஸ்ஸே நல்லா வருது

மங்குனி அமைச்சர் said...

உள்ளேன் டீச்சர்

அன்புடன் மலிக்கா said...

கவிதையை எழுதிவிட்டு மொக்கையின்னு சொன்னா இல்லையில்ல இது கவிதைதான் அப்படின்னு நாங்க சொல்லுவோமுன்னுதானே இப்படி மொக்க கவிதையின்னு போட்டிருக்கீங்க..நாங்க சொல்லமாட்டோமே{:}}}}}}}}}}}}}

என்னா ஒரு லொள்ளு..

அசத்துங்க ஷர்மி.

சௌந்தர் said...

கோயம்புத்தூர்
நல்ல நட்புகளும், தவறுகளை சொல்லி திருத்தும் நல்ல நண்பர்களும் நிறைந்த இந்த பதிவுலகுக்கு நண்பரால் அழைத்து வரப்பட்டேன். எனக்கு தோன்றிய / பார்த்த / ரசிச்ச விசயங்களை எழுதுவேன். பிடித்தால் படியுங்கள்! ஊக்குவியுங்கள்!///

அந்த நண்பர் யாருன்னு தெரியுது ...


வாழ்த்துக்கள்....

ஷர்மிளா said...

சங்கவி சார், ரொம்ப நன்றி சார், கமென்ட் போட்டதுக்கு

சௌந்தர் சாருக்கு நன்றிங்க ., நிறைய எழுதி திருத்த முயற்சி பன்னுறேங்க., தமிழ்ல தப்பு வந்த என் கணவர்கிட்டதாங்க கேட்பேன், அதுனால தப்பா இருந்த அவர திட்டிறேன் சரிங்களா? ஹி ஹி ஹி

செந்தில் சார் , நமக்கு காமெடி வருதுங்களா., ஹய்யா ஜாலி.,
தேங்குசுங்க

மங்குனி அமைசெரே நான் டீச்சர் இல்லைங்க, குடும்ப தலைவி

நன்றி மல்லிகா மேடம்

சௌந்தர் சார், பெரிய ஆளுங்க நீங்க., ஆமா அது யாருகோன்னு மெயில்ல சொல்லுங்க பாப்போம்.