Friday, 3 June 2011

குப்பு குப்புன்னு ஊதுற சமூக எதிரி...

என் இனிய எதிரிகளே, என்னடா எதிரின்னு சொல்லறேன்னு பார்க்காதீங்க, எனக்கு பிடிக்காத ஒன்னை ஒருத்தர் செய்யும் பொது எனக்கு வரும் பாருங்க கோவம், அத அடக்கவே முடியாது., இப்ப கூட அந்த மாதிரி ஒரு கோவத்தை அங்கே காட்ட முடியாம இப்ப உங்க கிட்ட சொல்லபோறேங்க., அதுக்கு முன்னாடி நம்ம தமிழ் கலாசார வணக்கமுங்க!

தன்னோட குடும்பம், உறவினர், நண்பர் என்று யார் மேலயும் அக்கறை இல்லாத இவங்கள பத்திதாங்க சொல்ல போறேன், இல்லே இல்லே திட்ட போறேன் .

வேற யாரு நம்ம சிகரட் குடிக்கிரவங்கதாங்க அவங்க.,!


எங்கே உங்களுகேலாம் மூளைன்னு ஒன்னு இருக்கா? இல்லையா? சிகரெட்ட குடிக்கிறதுதான் குடிக்கிறீங்க அந்த கருமத்த கொஞ்சம் வெளியே பொய் குடிச்சு தொலயலாமேதானே ..? குடிச்சே தொலயாதீங்கன்ன கேட்கவா போறீங்க., அப்படி கேட்க நான் யாருங்க ., உங்க சகோதரியா? இல்லே தோழியா? சரி விடுங்க,

அன்னைக்கு கடைக்கு போயிருந்தேங்க, அங்கே ஒரு சமூகத்த பத்தி கவலையில்லாத ஒரு ஆளு அவ்வளவு பேர் நிக்கிரமேன்னு கவலை இல்லாம குப்பு குப்புன்னு புகையை ஊதுராறு., இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அடுத்தவங்கள பத்தி அக்கரேயே இல்லைங்க., ச்சே இந்த மாதிரி ஆளுங்க வீட்டுக்கு நான் ஒரு ஆளை கூபிட்டு வந்து அந்த ஆளு வீட்டுல எல்லோருக்கும் முன்னாடி குப்பு குப்புன்னு ஊத சொன்னா , இவர் எங்கே போயி முட்டுவாறு, இவங்கதாங்க சமூக எதிரி., இதுக்கு நியாயம் கேட்க உங்ககிட்ட வந்த நீங்களும் பம்முவீங்க, ஏன்னா உங்களில் பலபேர் சிகரட் ஆசாமியாதான் இருப்பீங்க., அதனால இங்கே கொட்டி தீத்துக்கிறேன் .

ஏன் நீங்களே அந்த ஆளுகிட்ட திருந்த சொல்லவேண்டியதுதானே அப்படின்னு கேட்பீங்க, அதுனால அந்த சண்முக எதிரி.... ச்சே ச்சே சமூக எதிரி கிட்டே என்னோட ஐடியை குடுத்து நாளைக்கு என்னோட ப்ளாக்க பாருன்னு சொல்லிட்டேன்., அவனுக்கு அதுவே பெரிய அடிதானே.,??

சரி இதெல்லாம் படிச்சிட்டு கமெண்டுல உங்க வீட்டுகாரர் குடிக்காமாட்டாராக்கும்., என்று கேட்குறது., என்னை திட்டுறது., கமெண்டே போடகூடதுன்னு நினைக்கிறது .,இப்படி எத நினச்சாலும் எனக்கு கவலையில்லை., இத படிச்சு உங்கள்ள யாராவது ஒருத்தர் திருந்தினாலும் சந்தோசமுங்க!

8 comments:

sathishsangkavi.blogspot.com said...

////இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அடுத்தவங்கள பத்தி அக்கரேயே இல்லைங்க.//

இந்த பதிவ படிச்சதும் கண்டிப்பா அக்கரை வந்துரும்னு நம்பிக்கை இருக்குங்க...

நசரேயன் said...

//படிச்சு உங்கள்ள யாராவது ஒருத்தர் திருந்தினாலும் சந்தோசமுங்க!//

படிச்சி முடிச்சி ரெண்டு சிகரட் குடிச்சேன்

மதுரை சரவணன் said...

நல்ல கருத்து .. திருந்துபவர்கள் யாரும் இருப்பார்களா? வாழ்த்துக்கள்

மர்மயோகி said...

சிகரெட் ஊதுறவன் மூஞ்சில காரி துப்புங்க..
நாம சுவாசிக்கிற மூச்சுக் காற்றை நாசம் பண்றவன நாம ஏன் சும்மா விடனும்?

சி.பி.செந்தில்குமார் said...

வெரிகுட்.. காற்றை மாசுபடுத்டுபவன் சமூக விரோதி

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்கின் லே அவுட்டில் மழலை படம் கலக்கல்

ஷர்மிளா said...

ஹலோ சங்கவி சார் எப்படி இருக்கேங்க? நலமா சார் ????? திருந்துவாங்க ??????? திருந்தினால் சந்தோசம் சார் .

நசரேயன் சார் நீங்க ரொம்ப நல்லவர் சமுதாயத்து மிது எவ்வளவு அக்கர. நீங்கள் பொது இடத்தில் குடிக்காமல் இருந்தால் ரொம்ப நல்லது .

சரவணன் சார் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அப்படி இருந்தால் சந்தோசம்.

மர்மயோகி சார் your 100% correct .

செந்தில்குமார் சார் மிக்க நன்றி .

இந்த டொபிக் பற்றி எழுதும்போது நினைத்தேன் யாரும்வரமட்டாங்க என்று ஆனால் நீங்க எல்லோரும் கம்மென்ட் போட்டதற்கு மிக்க நன்றி .

Unknown said...

இதுவும் நல்லதுதான் அடிவாங்காம